திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 11 மாதத்தில் 90 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 11மாதத்தில் 90 குழந்தைத் திருமணங்கள்தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சைல்டு லைன் அமைப்பின் இயக்குநர் நம்பி தெரிவித்தார்.

இதுகுறித்து நேற்று அவர் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த11 மாதத்தில் மட்டும் 90 குழந்தைத்திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கரோனா ஊரடங்கு அமலில்இருந்தபோது அதிகளவில் திருமணங்கள் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை சைல்டு லைன் அமைப்பினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுவரைகுழந்தைத் தொழிலாளர்களாக இருந்த74 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பாலியல் தொல்லையை சந்தித்த 19 குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பிச்சை எடுத்த 30 குழந்தைகள் மீட்கப்பட்டு மறுவாழ்வு வழங்கப்பட்டுள்ளது. வேலை செய்யும் இடம், பள்ளிகள் என தாக்குதல்களை சந்தித்த 73 பேர் அளித்த தகவலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே வந்த 27 குழந்தைகளும் கண்டறியப்பட்டுபெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர். கடந்த 11 மாதத்தில் மட்டும் சைல்டுலைன் அமைப்புக்கு 1200 அழைப்பு கள் வந்துள்ளன.

இதில் 787 அழைப்பு களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் வேலைக்குசெல்லத் தொடங்கி விட்டனர். பள்ளி,கல்லூரிகள் தொடங்கும்போது அவர்களது வருகையை கண்காணித்து, கரோனாவுக்கு முன்புபயின்ற அனைவரையும் படிக்க வைப்பதற்கான நடவடிக்கையை கல்வித்துறை செய்யவேண்டும். இவ்வாறு அவர்தெரிவித்தார். இதில் ஒருங்கிணைப்பாளர்கள் கதிர்வேல், தினேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்