திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மூவர் கைது இரு சக்கர வாகனங்கள், ரூ.60 ஆயிரம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மூவரை, திருப்பூர் வடக்கு போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீஸார்கூறியதாவது: திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் கடைகளை உடைத்து திருடுவது, தூங்கிக்கொண்டிருக்கும் நபர்களிடம் பணத்தை அபகரிப்பது மற்றும் இரு சக்கர வாகனங்கள் திருடுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இவற்றை கண்டுபிடிக்க மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், வடக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜன் மற்றும் போலீஸார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றச் சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் வசித்து வரும் பாலாஜி (33) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ. 60,000 கைப்பற்றப்பட்டது.

அதேபோல, இரு சக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்த கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் அகிலன் (27), அந்தோணி பைஜூ (50) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும், கோவையில் நடத்திவந்த இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் பணிமனையில் திருட்டு வாகனங்களை விற்பனைக்கு மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான இரண்டு இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்