பிஏபி வாய்க்கால்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு,38 ஆண்டுகளாக இழப்பீட்டுத் தொகை தரப்படாததைக் கண்டித்து, விரைவில் விவசாயிகள் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவர் சி.பொன்னுசாமி நேற்று விடுத்த அறிக்கை: பிஏபி பாசனத் திட்டத்தின் கீழ் கடந்த 1982-ம் ஆண்டு பல்லடம் விரிவாக்கப் பகுதியில் பாசன வாய்க்கால்கள் வெட்டப்பட்டன.
திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட ஆண்டிபாளையம், இடுவாய், மங்கலம், சாமளாபுரம், பூமலூர் ஆகிய பகுதிகளில் பிஏபி வாய்க்கால்கள் வெட்டப்பட்டன. அப்போது எங்கள் பகுதியில் இருந்தநிலங்களை அரசு எடுத்துக்கொண்டது.வாய்க்காலுக்காக தங்கள் நிலத்தை இழந்த விவசாயிகள், பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் இழப்பீடு கேட்டு முறையிட்டு இறுதியாக நீதிமன்றத்தை நாடிதீர்ப்பை பெற்றனர். இந்நிலையில் மங்கலம், இடுவாய், வேலம் பாளையம் மற்றும் ஆண்டிபாளையம் பகுதி விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. இப்பகுதிவிவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக தற்போதைய நிலமதிப்பின்படி, ரூ. 5 கோடி வழங்க வேண்டும். 38 ஆண்டுகளாக வழங்கப்படாத இழப்பீட்டு தொகையை, உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க அரசும்,மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கைஎடுக்க வேண்டும். இல்லையெனில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் விரைவில் நீதிமன்றத்தை நாடுவோம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago