டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: ஆட்சியரிடம் புகார்

திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என, மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக முருகம்பாளையம் மற்றும் இடுவம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள், மாவட்டஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: முருகம்பாளையம் பிரதான சாலையின்மையப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ளதாக அறிகிறோம். ஏற்கெனவே எங்கள் பகுதியில் ஏராளமான டாஸ்மாக் கடைகள் இருப்பதால், பல குடும்பங்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றன. ஆண்கள் பலரும் குடிக்கு அடிமையாகிவிட்டனர். புதிதாக அமையவுள்ள டாஸ்மாக் கடை அருகே, கோயில்களும்,பள்ளிகளும் உள்ளன. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், பக்தர்கள் பாதிக்கப்படுவர். எனவேஎங்கள் பகுதியில் டாஸ்மாக் கடையை அமைக்கக் கூடாது.

வீடு ஒதுக்க கோரிக்கை

மாற்றுத் திறனாளிகள் ஆட்சியரிடம் அளித்த மனு: நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள். எங்களது குடும்பங்கள் வறுமையில் சிக்கியுள்ளன.

நாங்கள் அனைவரும் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு கிடைக்கும் சொற்ப வருவாயில், வீட்டின் வாடகையை கொடுக்க முடியாமல் தவிக்கிறோம். எனவே எங்களுக்கு கருணை அடிப்படையில் பழவஞ்சிபாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் இலவசமாக வீடுகள் ஒதுக்கித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்