செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்த மழையால் பல இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கலைச் சின்னங்கள் அருகே மழைநீர் தேங்கியுள்ளது. இதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பை வெள்ளநீர் சூழ்ந்து வடியாமல் உள்ளது. தரைத்தள குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகள் உடனடியாக வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றி, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இதேநிலை தொடர்வதால், மழைநீர் கால்வாய்கள் அமைக்க மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குநர் செல்வகுமார் கூறியதாவது: தற்போது பெரும்பாக்கம் பகுதியில் மழைநீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஜெசிபி மூலம் கால்வாய் அடைப்புகளை சரிசெய்யும் பணிகள் தொடங்கியுள்ளன என்றார்.
காஞ்சிபுரம் பகுதியில் பெரிய அளவில் மழைபாதிப்பில்லை. ஜெம்நகர், விஜயலட்சுமி நகர் உள்ளிட்ட சில நகர்புறப் பகுதிகளில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது. அதுவும் மழை பெய்வது நின்றுவிட்டதால் காயத் தொடங்கிவிட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago