முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள்தண்டனை கைதியாக சென்னைமத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ள பேரறிவாளன், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட் டுள்ளதால் அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பேரறிவாளனை 30 நாட்களில் பரோலில் விடுவிக்க அனுமதி அளித்துது. இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டார்.
மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய் தார். இந்த மனுவை கடந்த 6-ம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பேரறிவாளனுக்கு 23-ம்தேதி வரை பரோல் வழங்கி உத்தர விட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி சிகிச்சைக்காக பேரறிவாளன் விழுப்புரம் வந்து சிகிச்சைக்கு பின் ஜோலார்பேட்டை திரும்பினார்.
இந்நிலையில் மீண்டும் பரோலை நீடிக்க வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வருகிற 7-ம் தேதிவரை பரோலை நீடித்து நீதிமன்றம்உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவா ளன் தன் தாயார் அற்புதம்மாளுடன் வந்தார். அவருக்கு மருத்துவபரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. சிகிச்சைக்குப் பின் நாளை(நவ. 30) அவர், மீண்டும் ஜோலார் பேட்டைக்கு புறப்பட்டுச் செல்வார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago