கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கோமுகி வனச்சர கம் எல்லைக்குட்பட்ட மதூர் கிராமம் முதல் மாயம்பாடி வரை
ஏற்கெனவே இருந்த மலைப் பாதை தற்போது பெய்த மழை யில் சேதமடைந்துள்ளது. இப் பாதையை அப்பகுதி மலைவாழ் மக்கள் கடந்த இரு தினங்களாக சீரமைத்து வந்தனர்.
இதையறிந்த வனத்துறையினர் வனப் பகுதியில் பாதையை சீரமைக்கக் கூடாது; சீரமைக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் மீது வனத்துறை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் எனமிரட்டி அச்சுறுத்தியதாக கூறப்படு கிறது.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் த.ஏழுமலை தலைமை யில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வி.அண்ணாமலை உள் ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கோமுகி அணையில் உள்ள வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வனத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத் தினர்.
பேச்சுவார்த்தையில் பாதையைசீரமைக்க ஒப்புக்கொண்டதை யடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago