கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2-ம் போக பாசனத்துக்கு 120 நாட்கள் தண்ணீர் திறக்க தீர்மானம்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2-ம் போக பாசனத்திற்கு 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி அணை உதவி செயற்பொறியாளர் அலுவலகத் தில், அணையில் இருந்து 2020-21-ம் ஆண்டில் 2-ம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. உதவி செயற்பொறியாளர் சரவணகுமார் தலைமை வகித்தார். உதவி பொறியாளர் சையத் ஜஹ்ருதீன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் வருவாய்த் துறை, வேளாண்மைத்துறை, பையூர் வேளாண்மை பயிற்சி நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில், கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2020-21-ம் ஆண்டிற்கு 2-ம் போகத்திற்கு டிசம்பர் 12-ம் தேதி முதல் 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் விட வேண்டும். அணையில் புதிய மதகுகள் அமைக்கும் பணிகள் ஒப்பந்த காலத்துக்கு முன்பே முடிக்கப்பட்டு, தற்போது அணையில் 50.10 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வர், பொதுப்பணித்துறை அலுவலர்கள், ஒப்பந்ததாரர் உள்ளிட்டவர்களுக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. பாசனத்துக்கு தண்ணீரை சிக்கன மாகப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத் தில் அணை பாசன விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தண்ணீர் திறக்க அரசாணை வெளியிடப் படும். இதனைத் தொடர்ந்து அணையில் 2-ம் போகபாசனத் துக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக, முதல்வர் அறிவிப்பார் என பொதுப்பணித் துறை அலுவலர் கள் தெரிவித்தனர். இக்கூட்டம் 3 ஆண்டுகளுக்கு பின்னர் நடை பெற்றது குறிப்பிடத் தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்