கும்மனூர் தென்பெண்ணை ஆற்றில் மேம்பாலம் அமைக்க அரசிடம் கோரிக்கை கிருஷ்ணகிரி எம்பி தகவல்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கும்மனூர் கிராமத்தில், கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் செல்லகுமார் ஆய்வு செய்தார். அப்போது கிராம மக்கள் அவரிடம் கூறியதாவது:

கும்மனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் தென்பெண்ணை ஆற்றை ஓட்டி அமைந்துள்ளன. கும்மனூர் விவசாயி களுக்கு, இங்கிருந்து ஒரு கிமீ தூரத்தில் தென்பெண்ணை ஆற்றைக் கடந்து சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விளைநிலங்கள் உள்ளன.

இதற்காக வயலில் ஏர் ஓட்டுவது, நாற்று நடுவது, உரம் இடுவது, அறுவடை செய்வது போன்ற பல்வேறு பணிகளைச் செய்ய ஆற்றில் இறங்கித்தான் சென்று வருகிறோம். அறுவடை முடிந்தபின் நெல் சுமைகளையும் தென்பெண்ணை ஆற்றில் இறங்கிக் கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. மழைக் காலத்தில், ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும் போது ஆற்றைக் கடக்க முடியாமல் 14 கிமீ தூரம் சுற்றிக் கொண்டு வர வேண்டும். எனவே, இங்கு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக எம்பி செல்ல குமார் கூறும்போது, ‘‘ இங்கு மேம்பாலம் அமைப்பது தொடர் பாக, முதல்வர், அமைச்சர், தலைமைச் செயலா ளரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். ,’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்