புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடிய விவசாயிகள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், திருவாரூரில் நேற்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர், வேளாண் சட்ட நகலை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு தலைமை வகித்த அச்சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதிய வேளாண் சட்டம் அமலுக்கு வரும் நிலையில், வரும் பிப்ரவரி மாத நாடாளுமன்ற பட்ஜெட்டுக்கு பிறகு தமிழ்நாட்டிலும் நெல் கொள்முதல் முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும்.
எனவே, விவசாயத்துக்கு எதிரான இந்தச் சட்டத்துக்கு தமிழக முதல்வர் ஆதரவளித்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தச் சட்டங்களுக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேவை ஏற்பட்டால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி வேளாண் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும்.
இதை மறுக்கும் பட்சத்தில் தமிழக முதல்வருக்கு எதிராக தமிழக விவசாயிகள் போராடுவோம்.
டிச.3-ம் தேதி விவசாயிகளிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி, இந்தச் சட்டத்தை திரும்பப் பெறுவார் என எதிர்பார்க்கிறோம். இல்லையெனில், டெல்லி போராட்டத்தில் தமிழக விவசாயிகளும் பங்கேற்பார்கள் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago