கிசான் நிதியுதவி முறைகேடு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1.19 லட்சம் பேரிடம் ரூ.39 கோடி பறிமுதல்

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் விவசா யிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை முறைகேடாக பெற்ற வர்களிடமிருந்து ரூ.39 கோடி பறி முதல் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் பிரதமர் கிசான் நிதியுதவி திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணை யாக வழங்கப்படுகிறது. இதில்விவசாயிகள் மட்டுமே பயன்பெற முடியும்.

விவசாயிகள் அல்லாதோரும் முறைகேடான வகையில்இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவ தாக புகார் எழுந்தது.அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் முறைகேடாக இந்த நிதியை பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்ததது. இந்தப் பணத்தை பறிமுதல் செய் யும் நடவடிக்கையை வேளாண் அதிகாரிகள் மேற்கொண்டனர். மேலும் முறைகேடுகளில் ஈடுபட் டோர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் துறை இயக்குநர் தட் சினாமூர்த்தி தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் வேளாண் திட்டப் பணிகள், பயிர் காப்பீடு மற்றும் பிரதமரின் கிசான் தொகைமுறைகேடு தொடர்பாக விவாதிக் கப்பட்டது. அப்போது கிசான் நிதியை முறைகேடாக பெற்ற சுமார் 2 லட்சம் பேரில் 1 லட்சத்து 19 ஆயிரம் பேரிடமிருந்து ரூ.39 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பயிர் காப்பீடு, காப் பீட்டுத் தவணைத் தொகை செலுத்தும் தேதி நீட்டிப்புக் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா மற்றும் வேளாண் இணை இயக்குநர் வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்