விருதுநகர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் உத்தண்டராமன் கூறியுள்ளதாவது:
நடப்பு ராபி பருவத்தில் உளுந்து 2,849 எக்டேரிலும் பாசிப்பயறு 2,065 எக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது மிதமான முதல் கன மழை பெய்து வரும் நிலையில் உளுந்து, பாசிப்பயறு சேதமடைய வாய்ப்புள்ளது.
காப்பீடுக் கட்டணமாக ஏக்கருக்கு உளுந்து மற்றும் பாசிப்பயறு பயிர்களுக்கு ரூ.192 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காப்பீடைப் பதிவு செய்ய கடைசி நாள் நவ.30-ம் தேதி. விவசாயிகள் கடைசி நேரத் தாமதத்தைத் தவிர்த்து உடனடியாக பயிர்க் காப்பீடு செய்து பயன்பெறலாம், எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago