நாட்டில் தலை விரித்தாடும் லஞ்சம் உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி வேதனை

By செய்திப்பிரிவு

நாட்டில் லஞ்சம் தலை விரித்தாடு கிறது. லஞ்சம் வாங்குவது சோரம் போவதற்குச் சமம் என உயர் நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி தெரிவித்தார்.

ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தின் கிளை உச்சிப்புளி அருகே நாகாச்சி கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு சமுதாயக் கூடத்தை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பி.புகழேந்தி திறந்து வைத்தார். பிரார்த்தனைக் கூடம் மற்றும் உணவுக் கூடத்தை மதுரை ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகி சுவாமி கமலாத்மானந்தாஜி மகாராஜ் திறந்து வைத்தார். பெண் களுக்குத் தையல் இயந்திரம், மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை மதுரை கேன் பின் ஹோம்ஸ் நிறுவனத்தின் முதன்மை மேலாளர் எம். ஜெக நாதன் வழங்கினார். முன்னதாக ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகி சுவாமி சுதபானந்தர் வரவேற்றார்.

நீதிபதி பி.புகழேந்தி பேசும் போது, நாட்டில் லஞ்சம்தலை விரித்தாடுகிறது. லஞ்சம் வாங்குவது சோரம் போவதற்குச் சமம். இளைஞர்கள் டாஸ்மாக் கடைகளுக்குத்தான் அதிகம் செல்கின்றனர். இதையெல்லாம் தடுத்து மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றார். டாக்டர் சீனிவாசன், தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க மாவட்டத் தலைவர் ராஜீவ்காந்தி, நாகாச்சி ஊராட்சித் தலைவர் ராணி கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்