தோப்பூர் கிராமத்தில் மாவட்ட ஊராட்சி மூலதன மானிய நிதியில் கட்டப்பட்டு 2 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமல் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை பயனுக்கு கொண்டு வந்து தண்ணீர் விநியோகம் தொடங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் தாமோதரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தோப்பூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 2017-18-ம் ஆண்டு, மாவட்ட ஊராட்சி மூலதன மானிய நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.
கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் விட அமைக்கப் பட்டுள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் இதுவரை தண்ணீர் ஏற்றி விநியோகம் செய்யப்படவில்லை. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 2 ஆண்டுகளாக காட்சிப் பொருளாக உள்ளது. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா முருகேசன் கூறும்போது, ‘‘மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை உயரமான இடத்தில் அமைத்துள்ள னர். மின் மோட்டார் மூலம் தண்ணீரை தொட்டிக்கு ஏற்றும் போது, குழாய்கள் பழுதால் உடைப்பு ஏற்படுகிறது.
பழைய குடிநீர் குழாய்களை அகற்றிவிட்டு, புதிய குழாய்கள் அமைக்க மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் மூலம் நிதி கோரப்பட்டுள்ளது,’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago