கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 10-வது வருவாய் அலுவலராக சதீஷ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த சாந்தி, தேசிய நெடுஞ்சாலை பெங்களூரு செயற்கைக்கோள் நகர்புற வளைவு சாலை (நில எடுப்பு) திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலராக இட மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து சேலம் மாநகராட்சி ஆணையராக பணி யாற்றி வந்த சதீஷ், கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டார்.
சதீஷ் 2009-ம் ஆண்டு திருவள்ளூரில் துணை ஆட்சியர் (பயிற்சி) பணியில் சேர்ந்தார். 2010-ம் ஆண்டு கிருஷ்ணகிரி யிலும், 2012-ல் சேலம் மாவட்டத் திலும் வருவாய் கோட்டாட்சியராக பணி யாற்றினார். 2014-ம் ஆண்டு ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக வும், 2017-ம் ஆண்டு முதல் சேலம் மாநகராட்சி ஆணை யராகவும் பொறுப்பு வகித்தார். சதீஷ் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 10-வது வருவாய் அலுவலராக நேற்று பொறுப்பேற்றுக் கொண் டார். அவர், முன்னதாக ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தேசிய நெடுஞ்சாலை பெங்களூரு செயற்கைக்கோள் நகர்புற வளைவு சாலை (நில எடுப்பு) திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலராக சாந்தி நேற்று பொறுப்பேற்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago