புயல் பாதிப்பு குறித்து வருவாய், வேளாண்மைத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வுக்குப் பின்னர் பாதிப்புகளைப் பொறுத்து இழப்பீடு வழங்க பரிந்துரை செய்யப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலிக்காட்சி மூலம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் 10 வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் அமைக்கப் பட்டிருந்த காணொலிகள் மூலம் விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவித்தனர். அப்போது விவசாயிகள் பேசியதாவது:
வேலம்பட்டியைச் சுற்றி 4 ஊராட்சிகள் அமைந்துள்ளதால், இங்கு வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க வேண்டும். சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் பெற சிறு விவசாயிகள் சான்றிதழ் வழங்குவதற்கு மாற்றாக, கிராம நிர்வாக அலுவலரிடம் அனுபவ சான்றிதழ் பெற்றிருந்தால் வழங்க வேண்டும். 2-ம் போக சாகுபடிக்கு ஜிங்க் சல்பேட் மானியம், புகையான் தாக்குதலுக்கு மருந்துகள் வழங்க வேண்டும். அஞ்செட்டியில் கூடுதல் தானியக் கிடங்கு அமைக்க வேண்டும்.
`நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு, ஏரி, கால்வாய்கள் தூர்வார வேண்டும். அடியாட்கள் மூலம் விவசாயிகளிடம் கடன் வசூல் செய்வதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினர்.
விவசாயிகளின் கோரிக்கை களுக்கு ஆட்சியர் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் பதிலளித்து பேசியதாவது:
அடியாட் களைக் கொண்டு விவசாய கடன்களை வசூல் செய்யக் கூடாது. விவசாயிகளை கட்டாயப்படுத்தாமல் முறையாக கடன்களை வசூலிக்க வேண்டும். புயல் பாதிப்பு குறித்து வருவாய், வேளாண்மைத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வுக்குப் பின்பு பாதிப்புகளைப் பொறுத்து இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் மூலம் பரிந்துரை செய்யப்படும்.
நர்சரி பண்ணை அமைக்க கூட்டுறவு சங்கங்களிலும் கடன் வழங்க பரிந்துரை செய்யப்படும். விவசாயிகளின் குறைகளை உடனுக்குடன் களைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கிசான் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளால் புதிய பயனாளிகள் சேர்க்கப்படாமல் உள்ளது. விவசாயிகள் உரிய ஆவணங்க ளுடன் விண்ணப்பம் செய்தால், உரிய ஆய்வுக்குப் பிறகு நிதி கிடைக்க பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். இக்கூட்டத்தில் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ராஜேந்திரன், துணை இயக்குநர் அகண்டராவ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி உட்பட அனைத் துறை அலுவலர் கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago