கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அடுத்த கடூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேஷ். இவரது மனைவி சரஸ்வதி (42). இவரது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தை யொட்டி மாடு கட்டி வைத்திருந்தார். பால் கறப்பதற்காக நேற்று காலை சரஸ்வதி சென்றார்.
அப்போது, அங்கு சுற்றித்திரிந்த ஒற்றை யானை, சரஸ்வதியை விரட்டிச் சென்று தூக்கி வீசியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சத்தம் போட்டதால், யானை அங்கிருந்து சென்றது. இதையடுத்துபடுகாயம் அடைந்த சரஸ்வதியை மீட்ட அங்கிருந்த வர்கள், சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவலறிந்து வந்த ஓசூர் வனச்சரகர் ரவி தலைமையிலான வனத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago