திருவாரூர் தியாகராஜர் கோயிலில் திருவாதிரை உற்சவத்துக்கான பந்தல்கால் முகூர்த்தம் நேற்று நடைபெற்றது.
சப்தவிடங்க தலங்களில் தலைமை பீடமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் திருவாதிரை உற்சவமும், இதையொட்டிய பாத தரிசன நிகழ்வும் டிச. 29, 30-ம் தேதிகளில் நடைபெற உள்ளன.
திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆண்டு முழுவதும் தியாகராஜரின் திருமுகத்தை மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற அங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அபிஷேகத்தின்போது, கரத்தின் ஒரு பகுதியையும், மார்கழித் திருவாதிரையில் இடது பாதத்தையும், பங்குனி உத்திரத்தில் வலது பாதத்தையும் தரிசிக்க முடியும்.
டிச.30-ம் தேதி திருவாதிரை தினம் என்பதால் அன்று திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பாத தரிசனம் நிகழ்வு நடைபெறும்.
அதற்கு முதல் நாளான டிச.29-ம் தேதி இரவு சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பந்தல்கால் நடும் நிகழ்வு நேற்று காலை நடைபெற்றது.
திருவாதிரை உற்சவத்தையொட்டி, நாள்தோறும் சுவாமி வீதிஉலா நடைபெறும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago