வேலூரில் பொதுமக்கள் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

வேலூர் நிக்கல்சன் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மாங்காய் மண்டி அருகே பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட் டனர்.

வேலூர் மாநகராட்சிக்கு உட் பட்ட கன்சால் பேட்டை, இந்திரா நகர், திடீர் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நேற்று முன்தினம் காலை வெள்ளநீர் புகுந்தது. இந்த குடியிருப்புப் பகுதியில் இருந்து வெள்ள நீர் வெளியேற வேண்டிய நிக்கல்சன் கால்வாய், ஆக்கிரமிப் பின் பிடியில் சிக்கியுள்ளதால் வெள்ளநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைய டுத்து, வெள்ள நீருக்குள் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட் டுள்ளனர்.

இந்நிலையில், அம்பேத்கர் மக்கள் படை மாநிலச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாங்காய் மண்டி அருகே நேற்றுகாலை சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதுகுறித்த தகவலறிந்த வடக்கு காவல் துறையினர் மற்றும்வட்டாட்சியர் ரமேஷ் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். அப்போது, நிக்கல் சன் கால்வாயில் மண்ணைக் கொட்டி ஆக்கிரமிப்பு செய்யப் பட்ட பகுதியை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை யேற்று, விரைவில் மொத்த ஆக்கிர மிப்பு அகற்றப்படும் என வட்டாட் சியர் ரமேஷ் உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்