ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் நேற்று புதிதாக 67 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக31 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால், மொத்தபாதிப்பு எண்ணிக்கை 19 ஆயி ரத்து 142-ஆக அதிகரித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 164-ஆக அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கரோனாதொற்று நேற்று உறுதி செய் யப்பட்டுள்ளதை தொடர்ந்து, மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,207-ஆக அதிகரித்துள்ளது.
தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago