வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கருணாகரன் தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆய்வு கூட்டம் உதகையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கருணாகரன் பேசும்போது, “உதகை, கூடலூர் மற்றும் குன்னூர் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளில் 2,75,545 ஆண் வாக்காளர்கள், 2,96,196 பெண் வாக்காளர்கள், இதர 12 வாக்காளர்கள் என மொத்தம் 5,71,753 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 21 மற்றும் 22-ம் தேதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பெறப்பட்ட 9,115 படிவங்களை முறையாக ஆய்வு செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

டிசம்பர் மாதம் 12 மற்றும் 13 -ம்தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு வழங்க தேவையான படிவங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் தேர்தல் அலுவலர் தொடர்ந்து கண்காணித்து, செம்மையான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

இக்கூட்டத்தில், ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, உதவி ஆட்சியர் (உதகை) மரு.மோனிகாரானா, சார் ஆட்சியர் (குன்னூர்) ரஞ்சித்சிங், கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் வட்டாட்சியர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.உதகையில் வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணியை ஆய்வு செய்த பார்வையாளர் கருணாகரன். படம்:ஆர்.டி.சிவசங்கர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்