நீலகிரியில் டிசம்பர் 1-ம் தேதி முதல் திருத்தியமைக்கப்பட்ட பசுமை வரி வசூலிக்க முடிவு

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் நுழையும் வாகனங்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி முதல் திருத்தியமைக்கப்பட்ட பசுமை வரி வசூலிக்கப்படும் என்று ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

கல்லாறு மற்றும் கக்கனல்லா சோதனைச் சாவடிகள் வழியாக மாவட்டத்தில் நுழையும் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வாகனங்களுக்கு ரூ.30 பசுமை வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த வரியை முறைப்படுத்தும் வகையில், பேருந்து, லாரிக்கு (டிப்பர்) ரூ.100, மேக்சி கேப்ஸ்,டூரிஸ்ட் டாக்சி வாகனங்களுக்கு ரூ.70, கார், ஜீப்களுக்கு ரூ.30, மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.15, இரு சக்கர வாகனங்களுக்குரூ.10 என வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் திருத்தியமைக்கப்பட்ட வரி அமலுக்கு வரும் என்று ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்