கிருஷ்ணகிரி நகரில் கலை நிகழ்ச்சிகள் மூலம் கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட தெருக்கூத்து கலைஞர்கள் நல அறக்கட்டளை சார்பில் நாட்டுப்புற இசை மற்றும் நாடகக் கலைஞர்களின் பங்களிப்புடன் நேற்று கிருஷ்ணகிரியில் கரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. இந் நிகழ்ச்சியை உதவி காவல் ஆய்வாளர் சிவசந்தர் தொடங்கி வைத்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங் கினார். இதில், நாடகக் கலைஞர்களின் கரோனா விழிப்புணர்வு நாடகம், நாதஸ்வரம், தவில், பம்பை, பேண்டு இசை, தப்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், மாடு, மயில், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், உருமி சேவையாட்டம், காளிஅம்மன் நடனம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. வள்ளுவர்புரம் சினிமா பின்னணி பாடகர் நாடகக் கலைஞர் பெருமாள் மற்றும் போளூர் கிராமியப் பாடகர் மகேந்திரன் ஆகியோர் விழிப்புணர்வு பாடல்களை பாடினர்.
கிருஷ்ணகிரி ரவுண்டானா வில் இருந்து காந்தி சாலை யில் ஊர்வலமாகச் சென்று பழையபேட்டை நகரப் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். இதையடுத்து நகராட்சி அலுவலகத்தில் தெருக்கூத்து கலைஞர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். இந் நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சந்திரா மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago