பரங்கிப்பேட்டை அருகே கரை ஒதுங்கிய மட்டிகளை பொது மக்கள் அள்ளி சென்றனர்.
‘நிவர்' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. நேற்று காலை வெயில் அடித்தது. இந்த நிலையில் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சி.புதுப்பேட்டை கிராம கடற்கரை பகுதியில் ஏராளமான அளவுக்கு மட்டி குவிந்து கிடந்தது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள், கடற்கரை பகுதிக்கு சென்று சாக்கு மூட்டைகளிலும், பைகளிலும் அவைகளை அள்ளி சென்றனர். பெண்கள் பலர் நடந்தே சென்று கூடைகளில் மட்டியை அள்ளி சென்றனர்.
கடல் சிப்பி வகையைச் சேர்ந்த மட்டி மருத்துவக்குணம் கொண்டது. அதனால் பலரும் அதனை அள்ளி சென்றனர்.
அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், "கடந்த 3 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் காற்றும்,மழையும்பெய்ததால் கடலில் இருந்து மட்டி கரை ஒதுங்கியுள்ளது" என்று தெரிவித் தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago