கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 39 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர் என ஆட்சியர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி ஆய்வு செய்தார். அப்பள்ளியில், சுற்றுப்புற தூய்மை, வகுப்பறைகள், ஹைடெக் லேப், ஸ்மார்ட் வகுப்பு, ஏடிஎல் லேப், மத்திய அரசினால் வழங்கப்பட்ட ஆட்டோமேட்டிக் லேப், வேளாண்மைத் துறை லேப், மூலிகைத் தோட்டம், குடிநீர், கழிப்பறை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்.
இதுதொடர்பாக ஆட்சியர் கூறும்போது, ‘‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 மாதிரி பள்ளிகள், காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெத்தகொண்டப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 39 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் 2 ஏடிஎல் லேப் மூலம் மாணவர்களுக்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆன்லைன் மூலம் பாடத் திட்டங்கள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்,’’ என்று தெரிவித்தார். ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், தலைமை யாசிரியர் வளர்மதி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago