போச்சம்பள்ளி பகுதியில் நேற்று நடைபெறவிருந்த 2 குழந்தை திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த கரடனூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த பசுபதி(30) என்பவருக்கும் நேற்று திருமணம் நடக்க இருந்தது. இதே போல், ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த ராமஜெயம்(31) என்பவருக்கும் நேற்று திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்திருந்தனர். இதுதொடர்பாக போச்சம்பள்ளி வட்டாட்சியர் ஆஞ்சநேயருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து திருமணம் நடைபெறவிருந்த இடத்துக்கு விரைந்து சென்ற அதிகாரிகள், மணமகள்களின் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது 18 வயது முடிந்த பின்னர் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறியதுடன், இளம் வயது திருமணங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்து திருமணங்களை தடுத்து நிறுத்தினர். மீறி திருமணம் நடத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். வருவாய்த்துறை அலுவலர் களுடன் சைல்டு லைன் அலுவலர்கள் உடன் சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago