மருத்துவப் படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சக்தி தேவி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அரசு அறிவித்த 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள தாழ்த்தப்பட்ட, மிகவும் பின் தங்கிய மற்றும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த 4 மாணவ, மாணவிகளுக்கு சக்தி தேவி அறக்கட்டளை சார்பில் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. சக்தி தேவி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் கல்வி உதவித் தொகைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு முன்னாள் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மற்றும் வழிகாட்டி திட்ட ஆலோசகர் சி.ராஜமாணிக்கம், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அருள்குமார் மற்றும் வேளாண் அறிவியல் ஆசிரியர் கந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago