திருவாரூர் மாவட்டத்தில் ‘நிவர்’ புயலால் பாதிக்கப்படாமல் இருக்க நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு அதிமுக சார்பில் நேற்று உணவு வழங்கப்பட்டது. உணவு வாகனங்களை அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று கொடிய சைத்து அனுப்பிவைத்தார்.
தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் வசித்தவர்களின் வீடு களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அவர் களது வீடுகளில் சமையல் செய்ய முடியாத நிலை உள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர் களுக்கு அதிமுக சார்பில் உணவு வழங்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்கள் மற்றும் 4 நகரங்களிலும் அந்தந்த ஒன்றிய மற்றும் நகரத் தலைநகர்களில் சமைக்கப்பட்டு வாகனம் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எடுத்துச்சென்று உணவு விநியோகம் செய்யப்பட்டது.
திருவாரூர், நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட இடங்களில் உணவு விநியோகத்தை அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்தார். முன்னதாக, திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து உணவு எடுத்துச் செல்லும் வாகனங்களை அமைச்சர் ஆர்.காமராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் அதிமுக ஒன்றிய, நகரச் செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகள் உணவு விநியோகத்தை முன்னின்று நடத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago