நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் முகாம்களில்9,115 பேர் விண்ணப்பம்

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர்ப்பட்டியல் கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்டது. 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் தங்களது பெயர்களை வாக்காளர்ப் ட்டியலில் சேர்க்கவும், நீக்கவும், திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம் எனஅறிவிக்கப்பட்டது. இதையடுத்து,3 சட்டப்பேரவைத்தொகுதிகளிலும்உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடந்தன.

இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பெயர் சேர்ப்புக்கு விண்ணப்பம் அளித்தனர்.கடந்த 21-ம் தேதி நடந்த முகாமில் பெயர் சேர்க்க 2,765 பேரும், பெயர் நீக்கத்துக்கு210 பேரும், திருத்தம் செய்ய 323 பேரும், முகவரி மாற்றம் செய்ய 133 பேரும் விண்ணப்பித்தனர்.

21-ம் தேதி நடந்த முகாமில்பெயர் சேர்க்க 4,435 பேரும், நீக்கத்துக்கு 260 பேரும், திருத்தம் செய்ய 583 பேரும், முகவரி மாற்றத்துக்கு406 பேரும் விண்ணப்பித்தனர். 2 நாட்களில் மொத்தம் 9,115 பேர் விண்ணப்பித்துள்ளனர். அடுத்த சிறப்பு முகாம் டிசம்பர் 12,13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்