உதகை நகராட்சி சந்தையில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 85 கடைகள்எரிந்து சேதமாயின. இதையடுத்து, புதிய கடைகள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
தற்போது பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த 4 மாதங்களாக எவ்வித வருமானமுமின்றி வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ‘‘அரசு நிதி ஒதுக்கினால் மட்டுமே கடைகளின் கட்டுமானப் பணிகள்தொடங்க முடியும்’’ என தெரிவித்தனர்.
இந்நிலையில், மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் முஸ்தபா, செயலாளர் ரவிகுமார்,பொருளாளர் ராஜாமுகமது மற்றும் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் உதகை சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தொகை ஒதுக்க வலியுறுத்தினர். அதனை ஏற்று ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கி ஆட்சியரிடம் உதகை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.கணேஷ் கடிதம் வழங்கினார். எனவே, கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago