கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதால் திருப்பூரில் விற்பனையின்றி முகக் கவசங்கள் தேக்கம்

கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதால், திருப்பூரில் பல கோடி ரூபாய் மதிப்பிலான முகக் கவசங்கள் தேக்கமடைந்துள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசங்கள்அணிந்தே வெளியில் வரவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியது. இதையடுத்துமுகக் கவசங்களை தயாரிக்கும் பணியில் திருப்பூர் மாவட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். திருப்பூரில் இருந்து பல்வேறுமாவட்டங்களுக்கு லட்சக்கணக்கானமுகக் கவசங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

தற்போது கரோனா தொற்றின் தீவிரம் குறைந்து வருவதால், பல கோடி ரூபாய்மதிப்பிலான முகக்கவசங்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன.

இதுதொடர்பாக முகக் கவச உற்பத்தியாளர் கூறும்போது, ‘‘கரோனா தொற்று பரவல் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, திருப்பூரில் பல்வேறு நிறுவனங்கள் முகக் கவசங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தின. அதிகளவில் முகக் கவசங்களைஇருப்பும் வைத்தன.

தற்போது பாதிப்பு குறைந்துள்ளதால் முகக் கவசங்களுக்கான வரவேற்பும் குறைந்துள்ளது. திருப்பூரில் தொழில்துறையினர் தயாரித்து வைத்துள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான முகக்கவசங்கள் தேக்கமடைந்துள்ளன.

தற்போது ஊரடங்கு தளர்வுகளும் தளர்த்தப்பட்டு வருவதால், கடந்த காலங்களைபோல பொதுமக்களும் முகக் கவசம் அணிய ஆர்வம் காட்டுவதில்லை. முகக் கவச விற்பனை சரிவுக்கு இவையெல்லாம் முக்கியக் காரணம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்