முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீராணம் ஏரியின் நீர் இருப்பு குறைப்பு

By செய்திப்பிரிவு

புயல் மழை முன்னெச்சரிக்கையாக வீராணம் ஏரியின் நீர் இருப்பு குறைக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன் னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியில் உள்ள 44 ஆயிரத்து 586 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும்.இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு தொடர்ந்து குடிநீருக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

‘நிவர்’ புயல் வெள்ள தடுப்புநடவடிக்கையாக கடந்த இரு நாட்களாக வீராணம் ஏரியில் தண்ணீரை குறைக்கும் நடவடிக்கையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வீராணம் ஏரியின் நீர் மட்டம் 44.85 அடி உள்ளது. கீழணையிலிருந்து வடவாறு வழியாக ஏரிக்கு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியும், காட்டாறுகள் மூலம் விநாடிக்கு 150 கன அடி யும் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. வீராணம் ஏரியின் வடிகால் மதகான விஎன்எஸ்எஸ் வழியாக விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வெள்ளாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு விநாடிக்கு 50 கன அடி, விவசாய பாசனத்துக்கு விநாடிக்கு 10 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது.

வெள்ளாற்றில் ஏரி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஏரியின் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் பலத்த மழை பெய்தாலும் ஏரியைச் சுற்றி உள்ள பகுதிகளில் ஏற்படும் வெள்ள அபாயம் தடுக்கப்படும்.

கீழணை, வீராணம் ஏரி ஆகிய பகுதிகளில் சிதம் பரம் பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சாம்ராஜ், உதவி செயற்பொறியாளர்கள் சிதம்பரம் பாலமுருகன், அணைக்கரை அருணகிரி மற்றும் உதவி பொறியாளர்கள், ஊழியர்கள் கொண்ட குழுவினர் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின் றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்