2-ம் போக சாகுபடிக்காக கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீர் திறக்க விவசாயிகளுடன் 28-ம் தேதி ஆலோசனை

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2-ம் போக நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்க, வரும் 28-ம் தேதி பாசன விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இரு போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதற்காக விவசாயிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்படும். இக்கோரிக்கையை தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டு தண்ணீர் திறக்க தேதி அறிவிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அணையின் பிரதான முதல் மதகு உடைந்தது. இதனைத் தொடர்ந்து ரூ.3 கோடி மதிப்பில் புதிய மதகு பொருத்தப்பட்டது. இதன் பின்னர் பழுதான 7 மதகுகள் அகற்றப்பட்டு, ரூ.19 கோடி மதிப்பில் புதிய மதகுகள் பொருத்தப்பட்டன.

தற்போது, தொடர் மழையால் அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 50 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது முதல் போக சாகுபடியில் அறுவடை முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், 2-ம் போக நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்க பாசன விவசாயிகளுடன், வரும் 28-ம் தேதி கிருஷ்ணகிரி அணையில் உள்ள பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவல கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

3 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது நடைபெறும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசாணை வெளியிட்டு தண்ணீர் திறக்கப்படும் என பொதுப் பணித்துறை அலுவலர்கள் தெரி வித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்