நிவர் புயலையொட்டி, கிருஷ்ணகிரியில் படகுகள், மீட்பு பணிக்கான உபகரணங்கள், தளவாட பொருட்களுடன் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
நிவர் புயலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ள, தீயணைப்பு நிலையங்களில் உபகரணங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராமச்சந்திரன் கூறும்போது, ‘‘நிவர் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை தயார் நிலையில் உள்ளது. கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்ளிட்ட 7 தீயணைப்பு நிலையங்களில் 90 தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் தயாராக உள்ளனர். கிருஷ்ணகிரி, ஓசூர் நகரப் பகுதிகள், மலைக்கிராமங்கள், நீர்நிலைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும், ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்துக்கும் படகுகள், மீட்பு பணிக்கான உபகரணங்கள், தளவாடப் பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன,’’ என்றார்.
மேலும், பர்கூர் தீயணைப்பு நிலையத்தில் பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என நிலைய அலுவலர் செங்கோட்டுவேலு தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago