கிருஷ்ணகிரியில் நீர்நிலைகளை கண்காணிக்க அறிவுரை

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர்நிலைகளை கண்காணிக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றுகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பல்வேறு இடங்களில் லேசான காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிவர் புயலையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் ஆட்சியர் பேசியதாவது:

மாவட்டத்தில் இன்று (26-ம் தேதி) கன மழை பெய்ய உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனையொட்டி கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் தங்களின் அவசரத் தேவைக்கு கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பொதுப்பணித் துறையினர் கிருஷ்ணகிரி அணை மற்றும் பாரூர் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறும் போது கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் முன் கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். நீர் நிலைகளை கண்காணிக்க வேண்டும். பொது இடங்களில் மரம் விழுந்து சேதம் ஏற்படும்போது அலுவலர்கள் உடனடி யாக அதனை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்