பட்டுக்கோட்டை அருகில் உள்ள தொக்காலிக்காடு ஊராட்சி கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(50). இவர், வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி(40), மகள் பாக்கியலட்சுமி(19). இருவரும் தொக்காலிக்காட்டில் உள்ள இவர்களுக்கு சொந்தமான கூரை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ‘நிவர்’ புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு கருதி கூரை வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு இருவரும் சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago