பாரதிய மஸ்தூர் சங்கத்தின் அகில பாரத செயலாளர் துரைராஜ்,திருப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசியல் உள்நோக்கத்துடன் நாளை (நவ. 26) வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாரதிய மஸ்தூர் சங்கம் பங்கேற்காது. மத்திய அரசு 29 சட்டங்களை பிரித்து, சில திருத்தங்களுடன் அறிவித்துள்ளது.
அதில் 2 தொகுப்புகளான ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை பாரதிய மஸ்தூர் சங்கம் வரவேற்கிறது. தொழிலுறவு மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான தொகுப்புகளில் சில பிரிவுகளை எதிர்த்து பிஎம்எஸ் போராட்டங்களை நடத்தி உள்ளது.அவ்விதிகளை தொழிலாளர்களுக்கு சாதகமானதாக மாற்ற மத்திய அரசை பிஎம்எஸ் வலியுறுத்தி வருகிறது.
கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் மாநிலங்கள் உட்பட சில மாநில அரசுகளும், தொழிலாளர் விரோத சட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது. அவற்றுக்கு எதிராகவும் போராட தீர்மானித்துள்ளோம். மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களை மட்டும் சில தொழிற்சங்கங்கள் எதிர்ப்பதாகக் கூறுவது அரசியல் நோக்கம் கொண்டது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago