பொங்கலூர் அருகே அடுத்தடுத்து நான்கு கோயில்களில் திருட்டு

By செய்திப்பிரிவு

பொங்கலூர் அருகே அடுத்தடுத்து 4 அம்மன் கோயில்களில் பூட்டுகளை உடைத்து தங்க நகைகள், உண்டியல் பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் எஸ்.வேலாயுதம்பாளையத்தில் மஹா மாரியம்மன் கோயில்உள்ளது. அங்கு, தொட்டியபாளையத்தைச் சேர்ந்த ராசுகுட்டி பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் கோயிலை பூட்டிச் சென்றவர், நேற்று காலை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த ஒரு பவுன் தங்க மாங்கல்யம் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோயிருந்தன. இதுகுறித்து அவிநாசிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல, அருகேயுள்ள காட்டூர் மாரியம்மன் கோயிலில் பூட்டை உடைத்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஒன்றே கால் பவுன் தங்க மாங்கல்யம் திருடப்பட்டிருந்தது. அதற்கடுத்து வெள்ளநத்தம் பட்டத்தரசி அம்மன் கோயிலில் பூட்டு உடைக்கப்பட்டு அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஒரு பவுன் நகை மற்றும் உண்டியல் பணம் திருடப்பட்டிருந்தது.

மேலும், வெள்ளநத்தம் கரியகாளியம்மன் கோயில் பூட்டு உடைக்கப்பட்டு, அரை பவுன் தங்கம் மற்றும் உண்டியல் பணம் திருடப்பட்டிருந்தது.

இந்த மூன்று திருட்டு சம்பவங்கள் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்