விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தனியார் கல்லூரியில் இடம் கிடைத்ததால் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் கைவிட்ட மாண வர்கள் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள கடம்பன் குளத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் அருண்பாண்டி. திருச்சுழி அரசு பள்ளியில் படித்த இவர் நீட் தேர்வில் 190 மதிப்பெண்கள் பெற்றார்.
கடந்த 18ம் தேதி நடைபெற்ற மருத்துவப் படிப்புக்கான கலந் தாய்வில் பங்கேற்றார். அப்போது, அருண்பாண்டிக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. தனியார் கல்லூரியில் கட்டணம் செலுத்த முடியாத நிலையில்ஏமாற்றத்துடன் திரும்பி னார்.
இதேபோன்று, வெம்பக் கோட்டை அருகே துலுக்கன் குறிச்சியைச் சேர்ந்த இமானுவேல் என்ற மாணவருக்கும் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தது. கல்விக் கட்டணம் ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை ஆகும் என்பதால் கல்லூரியைத் தேர்வு செய்யாமல் திரும்பினார்.
இந்நிலையில், இவர்கள் ஆட்சியரிடம் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும்படி நேற்று மனு கொடுத்தனர்.
மனுக்களைப் பெற்ற ஆட்சியர் இரா.கண்ணன், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago