ராஜவாய்க்காலில் இருந்து குடகனாறு, ஆத்தூர் நீர்த்தேக்கத் துக்குத் தண்ணீர் திருப்பி விடப்பட்டதால் ஆத்தூர் நீர்த்தேக்க பகுதியில் ஆட்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் கூழையாறு வழியாக ராஜவாய்க்கால் வழியாக சித்தையன்கோட்டை, நரசிங்கபுரம், ஆத்தூர் நீர்த்தேக்கம், குடகனாறு செல்வது வழக்கம்.
தற்போது ராஜவாய்க்காலில் அதிக தண்ணீர் வருவதால் குடகனாற்றில் தண்ணீரைத் திருப்பிவிட பொதுமக்கள், குடகனாறு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை யடுத்து திண்டுக்கல் கோட்டாட்சியர் உஷா, பொதுப்பணித் துறை பொறியாளர்கள் நீதிபதி, சவுந்தரம், தங்கவேல் ஆகியோர் ராஜவாய்க்கால் பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தி, ராஜவாய்க்காலின் ஒரு மதகை அடைத்து குடகனாறு, ஆத்தூர் நீர்த்தேக்கத்துக்குத் தண்ணீரைத் திறந்து விட்டனர்.
குடகனாற்றில் தண்ணீர் திறந்துவிடக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை பத்து கிராம மக்கள் நடத்தி வந்த நிலையில், தற்போது குடகனாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ராஜவாய்க்கால் பகுதியில் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஆத்தூர் நீர்த்தேக்கப் பகுதிக்கு அனுமதியின்றி செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago