நிவர் புயல் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலங்களில் 24 மணி நேரம் செயல்படும் வகையில் கட்டுப் பாட்டு அறை ஏற்படுத்தப் பட்டுள்ளது என கிருஷ்ணகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் பாரூர் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி தற்போது நிரம்பி உள்ளது. `நிவர்' புயலையொட்டி பாரூர் பெரிய ஏரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது ஆட்சியர் கூறியதாவது:
நிவர் புயலையொட்டி பாரூர் பெரிய ஏரியில் நீர் வரத்து அதிகரித்தால், பாதுகாப்பு பணிகள் மற்றும் நீர் வெளியேற்றுவது குறித்து பொதுப்பணித்துறையினரிடம் ஆலோசனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
பாரூர் பெரிய ஏரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது, 500 சிமென்ட் பைகள், 50 சவுக்கு மரங்கள் தயார் நிலையில் உள்ளன. நிவர் புயல் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டாட்சி யர் அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் வகை யில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதிப்புகள் குறித்து கட்டண மில்லா தொலைபேசி எண் 1077-ல் தெரிவிக்கலாம். புயல் காரணமாக பொதுமக்கள் உடமைக்கும், உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், புயல் நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறி யாளர் நகுலன், போச்சம்பள்ளி வட்டாட்சியர் ஆஞ்சநேயா, உதவி பொறியாளர்கள் முருகேசன், பிரவீணா, பிடிஓ சிவபிரகாசம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago