வேலூர் பொய்கை கால்நடைசந்தையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை தொடங்க அதிகாரிகளுக்கு ஆட்சி யர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.
வேலூர் அடுத்த பொய்கை கால்நடை சந்தையில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். அங்கு, பொது மக்களுக்கு தேவையான அடிப் படை வசதிகள், கால்நடைகள் மற்றும் காய்கறி விற்பனைக் கான தனித்தனி இடம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக அதிகாரி களுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். மேலும், பொய்கை சந்தை பகுதியில் உள்ள ஆக்கிர மிப்புகளை ஆய்வு செய்து அகற்றஅதிகாரிகளுக்கு உத்தரவிட்டது டன், அதனைத் தொடர்ந்து சந்தை யில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் பணியை தொடங் கவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.
முன்னதாக, பொய்கை கால் நடை மருந்தகத்தில் ஒருங்கி ணைந்த பண்ணை திட்டம் 20-21 நிதியாண்டின் கீழ் ஆடு, மாடு, கோழி வளர்ப்பதற்கு 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை ஆட்சியர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது கால்நடை இணைஇயக்குநர் நவநீத கிருஷ்ணன், வேளாண் இணை இயக்குநர் மகேந் திர பிரதாப் தீக்ஷித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago