வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் சாலை பணிகளை 15 நாட்களில் முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு எம்பி கதிர் ஆனந்த் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் சாலைப் பணிகளை 15 நாளில் முடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், முதலாவது மண்டலத்துக்கு உட் பட்ட பல்வேறு இடங்களில் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் முடிந்த நிலையில் மீண்டும் சாலையை சீரமைக்கவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாவதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இந்தப் பணிகளை வேலூர்நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் நேற்று ஆய்வு செய்த துடன், மாநகராட்சி அதிகாரிகளை யும் தனியார் கட்டுமான நிறுவன அதிகாரிகளையும் வரவழைத்து ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘சாலைப் பணிகளை 15 நாட்களுக் குள் முடிக்க வேண்டும் என கூறியுள்ளேன். ஒரு பணியை முறையாக முடித்த பிறகு அடுத்த பணியை தொடங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது’’ என்றார்.

இந்த ஆய்வின்போது, முன் னாள் அமைச்சர் விஜய், மாநக ராட்சி பொறியாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணி கள் நடைபெற்று வருகின் றன. இதில், முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்