வேலூர், ராணிப்பேட்டை மாவட் டங்களில் தயார் நிலையில் 100 ‘நிவர்’ புயல் நிவாரண மையங்கள் உள்ளன. இங்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகள் உட்பட 1,500-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘நிவர்’ புயலாக இன்று (25-ம் தேதி) புதுவை மற்றும் மகாலிபுரம் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டத்தில் வெள்ள நீர் தேங்கும் என அடையாளம் காணப்பட்டுள்ள 42 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலை யில் வைத்துள்ளனர். அருகே உள்ள பள்ளிகளில் பொதுமக்களை தங்க வைக்க தேவையான ஏற்பாடு களை செய்துள்ளனர். வருவாய்த் துறையினர் உதவியுடன் தாழ் வானப் பகுதிகளில் தங்கியுள்ள பொதுமக்களை அழைத்து வரவும், அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்.மாவட்டத்தில் உள்ள அனைத் துத் துறையினர் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழுவினரும் ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள வாகனங் களுடன் தயார் நிலையில் உள்ளனர். இதற்கிடையில், காட்பாடி கரிகிரி பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் 52 பேரை அங்குள்ள அரசுப் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டு தங்க வைத்துள்ளனர். மற்ற பகுதி களில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல் பட்டு பொதுமக்களை மீட்டு அருகே உள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்க வருவாய்த் துறை யினர் உள்ளிட்ட அதிகாரிகள் தயாராக உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘நிவர்’ புயலை சமாளிக்க 58 இடங்களில் நிவாரண மையங்களை ஏற்படுத்தியுள்ளனர். நிவாரண மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று ஆய்வு செய்தார். மாவட்டம் முழுவதும் உள்ள நிவாரண முகாம்களில் 456 குழந்தைகள் உட்பட 1,585 பேரை தங்க வைத்துள்ளனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago