நிலக்கோட்டை அருகே சிப்காட் தொழிற்பூங்காவில் ஒருங்கிணைந்த மேன்மை உணவு தயாரிப்பு நிறுவனத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
ஆவாரம் சூப்பர் ஃபுட்ஸ் நிறுவனத் தலைவர் எம்.நாச்சிமுத்து வரவேற்றார். தொடக்க நிகழ்ச்சியாக சிறப்புப் பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு தொழில் வர்த்தகர் சங்கத் தலைவர் என்.ஜெகதீசன், ஆவாரம் சூப்பர் ஃபுட்ஸ் நிறுவனத் தலைவர் எம்.நாச்சிமுத்து ஆகியோர், ஒருங்கிணைந்த மேன்மைஉணவு தயாரிப்பு நிறுவனத் துக்கான அடிக்கல் நாட்டினர்.
மருத்துவர் மருதமலை முருகன், போட்டன் தலைமை செயல் அதிகாரி சுந்தர், பேராசிரியர் மனோகரன், மதுரை பாண்டியன் அப்பளம் திருமுருகன் உட்படபலர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, வளாகத்தைச் சுற்றி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்கள் ஒவ்வொருவராக 25-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.
இதுதொடர்பாக ஆவாரம் சூப்பர் ஃபுட்ஸ் நிறுவனத் தலைவர் எம்.நாச்சிமுத்து கூறும்போது, "ஒருங்கிணைந்த மேன்மை உணவு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளோம். இந்தியாவிலேயே முதன் முறையாக இங்குதான் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்தான் மேன்மைப் படுத்தப்பட்ட உணவு உற்பத்தி அதிகம் உள்ளது. மூலிகை தாவரங்கள் வளர்வதற்கு ஏற்ற மிதமான தட்ப, வெப்ப நிலை நிலவும் பகுதியாகவும் உள்ளது. தமிழகத்தில் 11 ஆயிரம் மூலிகைகள் விளைகின்றன. முருங்கை, பிரண்டை உள்ளிட்ட மேன்மை உணவுகளான மூலிகை வளங்களை எடுத்துச் செல்லும் விதமாக இந்த நிறுவனம் உள்ளது" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago