திருத்தணி அருகே முனிநாயுடுபள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்ரமணி, தனது நிலத்தைச்சுற்றி மின்வேலி அமைத்திருந்தார். இந்நிலையில் கோணசமுத்திரத்தைச் சேர்ந்த சஞ்சீவி,கடந்த 2015, ஜன.28 இரவுநிலத்துக்கு நீர்பாய்ச்ச சென்றபோது, சுப்ரமணி அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி உயிர் இழந்தார்.
இதுகுறித்து, பொதட்டூர்பேட்டை போலீஸார் பதிவு செய்தவழக்கின் விசாரணை, திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில், சுப்ரமணிமீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, நேற்று நீதிபதிசெல்வநாதன், ‘மின்வேலிஅமைத்த குற்றத்துக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததற்காக ஓராண்டு சிறை தண்டனை'யும் விதித்து, தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago