கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் வேலாயுதம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது அதிக மழை பெய்யும்போது தற்சமயம் நடவு மேற்கொண்டுள்ள மக்காச்சோளம், பருத்தி, நெல் மற்றும் கரும்பு ஆகிய பயிர்கள் சாய்ந்துவிட வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் வயலுக்குநீர் பாய்ச்சுவதை இன்றைய தேதியிலிருந்து நிறுத்தி வைக்கு மாறும், மழை பெய்யும்போது வயலில் மழைநீர் தேங்காமல் வெளியேற ஏதுவாக வரப்புகளை ஆங்காங்கே வெட்டி வைக்க வேண்டும். மக்காச்சோள பயிரில் தட்டைகளை வெட்டி சாய்த்து விடாமலும், பருத்தி செடிகளில் வெடித்த பஞ்சுகளை மழையில் நனைந்து விடாமல் எடுத்து பாதுகாக்க வேண்டும். எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago