‘நிவர்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத் தில் இருந்து கடலூருக்கு 6 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வந்துள்ளனர்.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள தாழ்ந்த காற்றழுத்த மண்டலம் புயலாக மாறியுள்ளது.இதனால் விழுப்புரம், கடலூர்,நாகை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் புயல் காற்று அடிக்கும், பலத்த மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது. இதையடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியர்சந்திரசேகர் சாகமூரி, கடலூர்,சிதம் பரம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கடலோர கிராமங்களில் பொதுமக்கள் தங்குவதற்கான புயல் பாதுகாப்பு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் நேற்று அரக்கோணத்தில் இருந்து கடலூருக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர். உதவி கமாண்டர் மனோஸ் பிரபாகரன் தலைமையில் ஆய்வாளர்கள் நந்தகுமார், மாரிகனி, விஜய குமார்,ரோகித்குமார், மண்டல், உமேஷ்சந்த் மற்றும் வீரர்கள் 126 பேர்கொண்ட 6 குழுக்கள் வந்துள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 25 பேர் உள்ளனர். இதில் 3 குழுக்கள் கடலூரிலும், 3 குழுக்கள் சிதம்பரத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago