குடகனாற்றில் தண்ணீர் வராததால் அனுமந்த ராயன்கோட்டை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் பாதிக்கப்படு வதாகக் கூறி, தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரி தலைமை யில் ஆய்வுக்குழு அமைக் கப்பட்டது. இந்தக் குழு அறிக்கை அளிக்கத் தாமதம் செய்வதாகக் கூறி, சில வாரங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது விரைவில் தீர்வு காணப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்தது. ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் நேற்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
குடகனாறு தண்ணீர் பங்கீட்டை அமல்படுத்தக் கோரியும், அறிக்கை அளிக்கத் தாமதம் செய்யும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அவர்கள் வலியுறுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago