நிலக்கோட்டை அருகே சிப்காட் தொழிற்பூங்காவில் ஒருங்கிணைந்த மேன்மை உணவு தயாரிப்பு நிறுவனத்துக்காக அடிக்கல் நாட்டு விழா

By செய்திப்பிரிவு

நிலக்கோட்டை அருகே உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் ஒருங் கிணைந்த மேன்மை உணவு தயாரிப்பு நிறுவனத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது.

ஆவாரம் சூப்பர் புட்ஸ் நிறுவனத் தலைவர் எம்.நாச்சி முத்து வரவேற்றார். தொடக்க நிகழ்ச்சியாக சிறப்பு பூஜை நடை பெற்றது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு தொழில் வர்த்தகர் சங்கத் தலைவர் என்.ஜெகதீசன், ஆவாரம் சூப்பர் புட்ஸ் நிறுவனத் தலைவர் எம்.நாச்சிமுத்து ஆகியோர் ஒருங்கிணைந்த மேன்மை உணவு தயாரிப்பு நிறுவனத்துக்கான அடிக்கல் நாட்டினர்.

நிகழ்ச்சியில் மருத்துவர் மருதமலைமுருகன், போட்டன் தலைமை செயல் அதிகாரி சுந்தர், பேராசிரியர் மனோகரன், மதுரை பாண்டியன் அப்பளம் திருமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வளாகத்தைச் சுற்றி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்கள் ஒவ் வொருவராக 25-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.

ஆவாரம் சூப்பர் புட்ஸ் நிறு வனத் தலைவர் எம்.நாச்சிமுத்து கூறியதாவது:

ஒருங்கிணைந்த மேன்மை உணவு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளோம். இந்தியாவி லேயே முதன்முறையாக இங்கு தான் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்தான் மேன்மைப் படுத்தப்பட்ட உணவு உற்பத்தி அதிகம் உள்ளது.

மூலிகை தாவரங்கள் வளர்வதற்கு ஏற்ற மிதமான தட்ப வெப்பநிலை நிலவும் பகுதியாக தமிழகம் உள் ளது. தமிழகத்தில் 11 ஆயிரம் மூலிகைகள் விளைகின்றன. முருங்கை, பிரண்டை உள்ளிட்ட மேன்மை உணவுகளாக மூலிகை வளங்களை எடுத்துச் செல்லும் விதமாக இந்த நிறுவனம் உள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்